இந்தியா

வாட்டும் குளிர் காஷ்மீரில் உறைநிலை

ஐஏஎன்எஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் குளிர் வாட்டியெடுக்கிறது. லே, லடாக் பகுதிகளில் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை உறைநிலைக்கும் கீழே சென்று மைனஸ் 12.1 டிகிரி செல்சியஸாக உள்ளது.

வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளத் தாக்கு பகுதி முழுவதும் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை உறைநிலைக்கும் (ஜீரோ டிகிரி) கீழே சென்று விட்டது. அடுத்த மூன்று நான்கு நாட்களுக்கு இரவில் மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்தநாட்களில் வானிலை வறட்சியாக இருக்கும். தெளிவான வானிலை காரணமாக குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை மேலும் சரியும்” என்றார். டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரையிலான 40 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மிகக் கடுமையான குளிர்காலம். இக்காலகட்டத்தில் ஏரிகள், ஓடைகள், நதிகள் அனைத்தும் உறைந்து காணப்படும்.

SCROLL FOR NEXT