திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் பணமதிப்பு நீக்கத்தின் போது உண்டியலில் செலுத்திய ரூ. 49.70 கோடி அப்படியே தேவஸ்தானத்தின் கருவூலத்தில் முடங்கி உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பலமுறை தேவஸ்தானம் கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்த ரூபாய் நோட்டுகளை என்ன செய்வதென்று தேவஸ் தானம் ஆலோசித்து வருகிறது.
பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு திடீரென அறிவித்த பண மதிப்பு நீக்கத்தின் காரண மாக பழைய 1,000, 500 ரூபாய்நோட்டுகள் செல்லாத நோட்டு களாகி விட்டன.
இந்த சமயத்தில் பக்தர்கள் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரூ.49.70 கோடி செல்லாத பணமாகமாறிவிடுமோ எனும் பயம் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரிடம் வந்துள்ளது.
இதனால், பக்தர்கள் பல கோயில்களில் இந்த நோட்டுகளை உண்டியலில் செலுத்தி, ஆண்டவன் மீது பாரத்தை போட்டுவிட்டனர். இதேபோன்று, திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலிலும் கோடி கணக்கில் பக்தர்கள் இந்த நோட்டுகளை காணிக்கையாக செலுத்தினர்.
தற்போது இந்த நோட்டுகளை மாற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர். மொத்தமுள்ள ரூ. 49.70 கோடியை மாற்றித்தருமாறு இதுவரை 4 முறை ரிசர்வ் வங் கிக்கு கடிதம் எழுதிவிட்டனர்.
ஆனால் இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. மத்திய அமைச்சர்கள் பலரிடம் முறையிட்டு விட்டனர். யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் ஏறக்குறைய 5 ஆண்டுகள் வரைஅந்த 49.70 கோடி ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தால் அவை கிழிந்து விடுமோ எனும் அச்சமும் வந்துள்ளது. வங்கியிலும் செலுத்த முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் தேவஸ்தானம் தவிக்கிறது.
சமீபத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தனது 2 ஆண்டு பதவிக் காலம் முடியும் போது இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உங்களுக்கு ஒப்புக்கொண்டால், பலர் இதுபோன்று பின் தொடர்வார்கள். ஆதலால், ரிசர்வ் வங்கியும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளது என கூறினார். ஆதலால், மாறாத ரூ. 49.70 கோடியை இனி என்ன செய்யலாமென தேவஸ்தானம் விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.