ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வரும் நிலையில், காவல் துறையின் முக்கிய அங்கமாக நுண் உணர்திறன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் (டிஜிபி) 3 நாள் மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி இக்கருத்தரங்கில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:
காவல் துறையில் பணிபுரிவோர் தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர் வுடன் தங்கள் கடமையை ஆற்றி வருவது பாராட்டுக்குரியது. நாட்டின் பாதுகாப்புக்கு இதுதான் மிகவும் அவசியம்.
காவல் துறை மீது உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கையை ஏற் படுத்த வேண்டும். அவர்களுடன் சுமுகமான உறவை கடைபிடிக்க வேண்டும். பொது மக்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளை அவர்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும்.
தங்கள் சாதனைகளைக் கொண் டாடுவதற்காக காவல் நிலையத் துக்கு பொதுமக்கள் வரும்போது, அவர்கள் காவல் துறையை நன்கு புரிந்துகொள்வார்கள். காவல் துறையினரின் செயல்களுக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள்.
அதேநேரம் காவல் துறையின் முக்கிய அங்கமாக நுண் உணர்திறன் இருக்க வேண்டும். நெகிழ்வு தன்மையுடன் கூடிய நிறுவன கட்டமைப்பை உருவாக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு தீர்வு காண்பதற்கு தொழில்நுட் பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி உள் ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளில் ஈடுபாடு காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீவிரவாத பாதைக்கு செல்லாத வாறு அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கான பணியில் குடும் பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதியவர் களை போலீஸார் ஈடுபடுத்தி உள்ளனர்.
மேலும் இரு மாநில எல்லை யில் உள்ள மாவட்ட போலீஸாருக் கிடையே நல்லுறவு இருக்க வேண் டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய உளவுத் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலை வர் பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார். காவல் துறை மற்றும் தடய அறிவியல் துறை ஆகியவற்றுக்கு பல்கலைக் கழங்களை நிறுவுவது குறித்தும் இந்த கருத்தரங்கில் ஆலோசிக்கப் பட்டது.
உளவுத் துறை சார்பில் நடை பெற்ற இந்தக் கருத்தரங்கில், மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் கள் கிரண் ரிஜிஜு ஹரிபாய் பர்த்திபாய் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்