இந்தியா

அவதூறு வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்

இரா.வினோத்

கர்நாடகா முன்னாள் எம்எல்ஏ.வும் நைஸ் நிறுவனத் தலைவருமான அசோக் கெனி, கடந்த 2004-ல் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு தனியார் விரைவு சாலை அமைத்தார். இந்நிலையில் 2011, ஜூன் 20-ம் தேதி கன்னட தனியார் சேனலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி அளித்தார். இதில், “நைஸ் நிறுவனம் மக்கள் நிலத்தையும் பணத்தையும் கொள்ளை யடிக்கிறது” என குறிப்பிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நைஸ் நிறுவனம், “நிறுவனத்தின் புகழை கெடுக்கும் வகையில் தேவகவுடா அவதூறு பரப்பிய தற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என பெங்களூரு குடிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மல்லனகவுடா, “நைஸ் சாலை திட்டத்தை கர்நாடக அரசும் உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளன. புகார் குறித்து தேவகவுடா எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனது குற்றச்சாட்டை தேவகவுடா நிரூ பிக்கத் தவறியுள்ளார். எனவே அவதூறான கருத்துக்காக நைஸ் நிறுவனத்துக்கு அவர் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT