இந்தியா

எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளது.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: "ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் வீரர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பதிலுக்கு இந்திய தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய தரப்பில் வீரர்களுக்கு காயமோ இல்லை உயிர் சேதமோ ஏற்படவில்லை" என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அத்துமீறல்கள்:

கடந்த ஏப்ரல் - மே காலகட்டத்தில் எல்லையில் 19 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த ஆண்டில் பாக் ராணுவ தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 41 வீரர்கள் காயமடைந்தனர். மொத்தம் 149 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT