இந்தியா

சர்வதேச யோகா தினம்: குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் யோகா பயிற்சி

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல்முறையாக சர்வதேச யோகா தினம் புதுடெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

அதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு ஆசனங்களைச் செய்து விழாவைச் சிறப்பித்தார். இதில் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த 35,985 பேர் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏழாவது சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து பலரும் இன்று வீடுகளில் இருந்தபடியே யோகாசனங்களை செய்தனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவரது மனைவியுன் இணைந்து யோகாசனங்களை செய்தார்.

நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன்

இதுபோலவே மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இதுபோலவே ராணுவ வீரர்கள், துணை ராணுவப்படையினரும் இன்று யோகாசனங்களை செய்தனர்.

லடாக் மலைப்பகுதியிலும் அதிகாலையிலேயே வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT