ஏழாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ம் தேதி காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார்.
ஏழாவது சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பிரபல யோகா ஆசான்களும், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஏழாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ம் தேதி காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ நாளை ஜூன் 21-ம் தேதி, 7வது யோகா தினத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆரோக்கியத்திற்கு யோகா என்பதுதான் இந்தாண்டின் கருப்பொருள், இது உடல் மற்றும் மனநலத்துக்கு யோகா செய்வதில் கவனம் செலுத்துகிறது.
நாளை காலை சுமார் 6.30 மணிக்கு, நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றவுள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.