சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக வரும் 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான பிரக்யா சிங் தாக்குர் நடத்தவுள்ளார்.
ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்காக வரும் 20-ம் தேதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் சிறப்பு யோகா நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜனநாயகத்துக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் நடைபெறவுள்ளது. அங்கிருந்து காணொலி மூலம் எம்.பி.க்களுக்கு யோகா நிகழ்ச்சியை பிரக்யா நடத்தவுள்ளார் என்று மக்களவை செயலர் தெரிவித்துள்ளார்.