மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மாநிலத்தில் கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட் பத்தைப் புகுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின்போது, ஆந்திராவில் தகவல் தொழில் நுட்ப வளர்ச் சியை மேம்படுத்துவது குறித்தும், விசாகப்பட்டினத்தில் மைக்ரோ சாப்ட் கிளை அலுவலகத்தை நிறுவு வது குறித்தும் ஆலோசித்தனர்.
மைக்ரோசாப்டின் ஃபைபர் நெட் முறையை பயன்படுத்தி குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒவ்வொரு வீட்டுக்கும் விரை வில் இணையதள இணைப்பை வழங்குவது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.
பின்னர் கல்வி, வேளாண்மை, பொது விநியோகம் ஆகிய துறைகளில் தகவல் தொழில் நுட்பத்தை புகுத்துவது தொடர் பாக மைக்ரோசாப்ட் நிறுவனத் துக்கும் ஆந்திர அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத் தானது.