இந்தியா

69-வது பிறந்த நாள் கொண்டாடினார் சோனியா: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிடிஐ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பிய வாழ்த்துச் செய்தி யில், ‘‘பிறந்தநாளை முன்னிட்டு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் நாட்டின் நலனுக்கான பல்வேறு பணிகளில் முழுமையாக ஈடு பட்டுள்ளீர்கள். வருங்காலத்திலும் இந்த பணி தொடர வாழ்த்துகிறேன். மேலும் இறைவனின் அருளாசி யுடன் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத் திருக்க வேண்டும் என்றும் வாழ்த்து கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி வெளியிட்ட ‘ட்விட்டர்’ செய்தியில், ‘‘பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியாவை வாழ்த்துகிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத் துடன் வாழ வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இதே போல் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடுவும் சோனியாவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மக்களவை நேற்று கூடியதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உறுப்பினர்கள் அனைவருக்கும் சோனியா காந்தியின் பிறந்தநாளை நினைவுப்படுத்தினார். அப்போது எழுந்து பேசிய வெங்கய்ய நாயுடு, மக்களவைக்கு வருவதற்கு முன்பாகவே சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டதாக கூறினார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத் துடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமரும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும், சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT