ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வருடாந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அப்போது இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தாக வுள்ளது. இந்நிலையில் ஷின்சோ அபேவின் சுற்றுப்பயணத்தால் இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று ‘ட்விட்டரில்’ பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித் துள்ளார்.
வாரணாசியில் அபே
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று கங்கை கரையில் நடக்கும் பிரசித்தி பெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் அபே பங்கேற்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி, ஜப்பான் சென்ற போது, கியோட்டோ நகரை போன்றே, தொன்மை மற்றும் கலாச் சாரங்களை மாற்றாமல் வாரணா சியை ‘ஸ்மார்ட்’ நகரமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாகவே வாரணாசி நகரை அபே பார்வையிடுகிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.