ஆந்திர மாநில சட்டப்பேரவை யின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. இதில் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த நகரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும் நடிகையுமான ரோஜாவை சபாநாயகர் ஓராண் டுக்கு இடைக்கால நீக்கம் செய்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இதையடுத்து, சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக, தனது உரிமை களை மீறி செயல்படுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன் அவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பேரவை செயலாளர் சத்யநாராயணாவிடம் நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் ஹைதராபாத் தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடந்து முடிந்த பேரவை கூட்டத் தொடரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச விடாமல்தடுத்தனர். கடந்த கூட்டத் தொடரில்கூட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொண்டதால் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் அவையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இம்முறை அவர்களது அத்துமீறலுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது. எனவே, அவை சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ரோஜாவை ஓராண் டுக்கு இடைக்கால நீக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ரோஜா அவையில் நடந்து கொண்ட முறையும், அவர் பேசிய முறையும் சரியல்ல. பலமுறை அவருக்கு எடுத்துக் கூறினாலும் அவர் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. மாறாக, நான் அவையின் சட்டத்துக்கு புறம் பாக செயல்படுவதாகக் கூறி என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதை அவை தர்மத்தின் படி எதிர்கொள்வேன். எனது 35 ஆண்டு கால அரசியல் அனுபவத் தில், இந்தக் கூட்டத் தொடரில் நடந்தது போன்ற சம்பவங்களை ஒருபோதும் பார்த்ததில்லை.
அவையில் நடந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் வெளியா னதை அறிந்து அதிர்ச்சி அடைந் தேன். அவைக்குள் நடந்த சம்பவங் கள் வெளியானது குறித்து விசா ரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். மேலும், ரோஜா பேசிய வீடியோ காட்சிகள் அடங்கிய சிடிகளை தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங் கிரஸ், பாஜக ஆகிய கட்சியின ருக்கு அவர்கள் கேட்டுக் கொண் டதற்கிணங்க வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த துணை சபாநாயகர் தலைமையில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒருவர் வீதம் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள் ளது. இந்த குழு வழங்கும் அறிக் கையின் பேரில் விவாதம் நடை பெறும். பின்னர் இதுகுறித்து நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிவப்பிரசாத் தெரிவித்தார்.