மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தாக்கரேவின் மகனும் மாநிலசுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவின் பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மும்பை டோம்பிவ்லி, எம்ஐடிசி பகுதியில் உள்ளஒரு பெட்ரோல் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.
யோகேஷ் மகாத்ரே என்ற சிவசேனா நிர்வாகி இதனை காலை 10 மணி நண்பகல் 12 மணி வரை, 2 மணி நேரத்துக்கு விநியோகம் செய்தார். இதனால் இந்த பெட்ரோல் நிலையம் முன்பு இரு சக்கர வாகனங்களின் நீண்ட வரிசை காணப்பட்டது.