தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவல கத்தில் தயாநிதி மாறன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த 2004-07 காலகட்டத்தில், தயாநிதி மாறன் மத்திய அமைச்ச ராக இருந்தபோது, 300-க்கும் மேற் பட்ட தொலைபேசி இணைப்பு களை முறைகேடாக பெற்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த இணைப்புகளை அவர் குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத் தியதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக, தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டபோது, உச்ச நீதிமன்றம் அதை நிராகரித் தது. தேவைப்பட்டால், அவரை சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கலாம் என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா அமர்வு உத்தர விட்டது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் தயாநிதி மாறன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்’ என்று உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது. அதன் படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தயாநிதி மாறன் நேற்று காலை முதல் நாள் விசாரணைக்கு ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொலைபேசி இணைப்புகள் குறித்து மாலை வரை விசாரணை நடத்தினர். தொடர்ந்து மேலும் 5 நாட்களுக்கு அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.