இந்தியா

புனே தொழில்நுட்ப பணியாளர் கொலை: மேலும் மூவர் கைது

செய்திப்பிரிவு

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதில் தொடர்புடையதாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும், இழிவுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் படம் ஒன்றை வெளியிட்டது தொடர்பாக, மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 28 வயதுடைய சோலாப்பூரை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் மொசின் ஷாதிக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்து ராஷ்டிரீய அமைப்பை சேர்ந்த 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீவரையும் ஜூன் 12- ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்டேரட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதவாதத்தின் காரணமாக இந்த கொலைச் சதி நடத்தப்பட்டதா? என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT