இந்தியா

புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி 800 ஓடிடி, டிஜிட்டல் ஊடகங்களில் குறை தீர்ப்பு அதிகாரி நியமனம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதியின்படி தங்கள் நிறுவனங்களில் குறை தீர்ப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அரசு வழிகாட்டுவிதிமுறைகள் பின்பற்றப்பட் டுள்ளதாக 800 ஓடிடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான், ஜியோ உள்ளிட்ட ஓடிடி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை தங்கள் நிறுவனங்களில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளன.

இன்னும் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய விவரங்களைஅரசுக்கு அனுப்பி வருவதாகவும்அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இவற்றில் பெரிய, சிறிய நிறுவனங்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள் அனுப்பியுள்ள விவரங்களில், ஒவ்வொரு விதிமுறையையும் எந்த அளவுக்கு அவை பின்பற்றியுள்ளன என்பதை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

புதிய விதிமுறையின்படி அனைத்து ஊடக நிறுவனங்களும் தொடர்பு அதிகாரி, குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறைகளை மூன்று கட்டங்களாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள் உள்ளிட்டவற்றை அமைச்சரவை குழு கண்காணித்து அது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பரிந்துரைக்கும். கடந்த பிப்ரவரி மாதம் இப்புதிய விதிமுறை வகுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `லைவ்வயர்’ மற்றும் `திவயர்' உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

செய்திகளை வெளியிடும் சம்மேளனங்களில் 78 டிவி சேனல்கள் உள்ளன. இவை 14 மொழிகளில் செய்திகளை 23 மாநிலங்களில் வெளியிடுகின்றன. இந்தக்கூட்டமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக விதிமுறையை முறையாக பின்பற்றியுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளன. - பிடிஐ

SCROLL FOR NEXT