இந்தியா

டீசல் வாகனங்களுக்கு தலைநகர் பாட்னாவில் தடை: பிஹார் முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

பிஹாரில் காற்று மாசு பிரச்சினை தீவிரமாகி வருவது கவலை அளிக்கிறது என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

எனவே சுற்றுச்சூழலை மேம்படுத்த தலைநகர் பாட்னாவில் 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற அவர் கூறியதாவது:

காற்று மாசு அதிகரித்து வருவது பற்றி வாகன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒலிப்பான்களால் ஏற்படும் இரைச்சல் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாட்னா மாநகராட்சிப் பகுதியில் மாசு பிரச்சினைக்கு தீர்வு காண குப்பைகள் எரிப்பது, பிளாஸ்டிக் எரிப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கலாம்.

காற்று மாசுக்கு கட்டுமானப் பொருள்களும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே கட்டு மானப் பணி நடைபெறும் இடத்தை தடுப்புகளால் மறைத்து கட்டுமானப் பணி மேற்கொள்ளலாம்.

மண், செங்கல், சிமென்ட் உள் ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகளும் அவற்றை மூடி ஏற்றி வந்தால் காற்றில் துகள் பரவாது.

கங்கைக் கரையில் அமைந்துள்ள செங்கல் சூளைகளும் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக உள்ளது. காடுகளின் பரப்பளவை அதிகரிக்க மரக்கன்று நடும் விவசாயிகளுக்கு,அவற்றை பராமரித்து வளர்க்க முதல் இரு ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு தலா ரூ. 10-ம் மூன்றாம் ஆண்டில் ரூ. 15ம் வழங்கப்படும். இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT