இன்னும் 48 மணி நேரத்தில் பருவமழை டெல்லியை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையானது எதிர்பார்க்கப்பட்ட காலத்தைவிட முன்னதாகவே உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக், ஹரியாணா, சண்டிகர், பஞ்சாப் மாநிலங்களில் தொடங்கிவிட்ட நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் டெல்லியிலும் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதனால், டெல்லி, ஹரியாணா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, புது டெல்லி, தென்மேற்கு டெல்லி, தெற்கு டெல்லியின் கஞ்வாலா, முன்கடா, பஸ்சிம் விஹார், பஞ்சாபி பாக், ரஜோரி கார்டன், டெல்லி கன்டோன்மன்ட், வசந்த் விஹார், பாலம் பகுதி, லோடி ரோடு, சாஃப்டர்ஜுங், குருகிராம், மானேசர், கார்கோடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்படுள்ளது.
ஒடிசாவை ஒட்டி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கக் காரணமாக இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.