டெல்லியில் கார்களை விட இரு சக்கர வாகனங்களே அதிக மாசு ஏற்படுத்துவதாக தெரிய வந்துள் ளது. என்றாலும் மாநில அரசின் போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்து இருசக்கர வாகனங் களுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, இரட்டை மற்றும் ஒற்றை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் சாலையில் அனுமதி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் புள்ளிவிவரப்படி, டெல்லியில் கார்கள் 20 சதவீதமும் இருசக்கர வாகனங்கள் 31 சதவீத மும் மாசு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் கனரக வாகனங்கள் 28%, மிதரக வாகனங் கள் 11%, சி.என்.ஜி வாகனங்கள் 7%, ஆட்டோ ரிக் ஷாக்கள் 3% என்ற அளவில் மாசு ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இரு சக்கர வாகனங்கள் அதிக மாசு ஏற்படுத்தும்போதிலும், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி அரசின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இருசக்கர வாகனங் களை நடுத்தர வகுப்பு மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதற்கும் கட்டுப்பாடு விதித்தால் அது அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என் பதால் அதற்கு விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையில், மாசு ஏற்படுவதில் பெருமளவு காரண மாக இருக்கும் இருசக்கர வாகனங் களுக்கு இதில் விலக்கு அளிப்பது அர்த்தமற்றதாகி விடும். எனினும் இதன் மீதான இறுதி முடிவு, டெல்லி அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசித்து டிசம்பர் 25-ம் தேதி எடுக்கப்படும்” என்றார்.
டெல்லியில் பதிவாகியுள்ள 88 லட்சம் வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 56 லட்சமாக உள்ளது. எஞ்சிய ஆட்டோ, கார், மித ரக மற்றும் கனரக வாகனங்கள் எண்ணிக்கை 32 லட்சமாக உள்ளது.
டெல்லியில் போக்குவரத்து துறை பதிவேட்டின் அடிப்படையில் இருசக்கர வாகனங்கள் எண் ணிக்கை 2006-07-ல் 32.44 லட்சம், 2010-11-ல் 43.42 லட்சம், 2012-13-ல் 49.62 லட்சம், 2013-14-ல் 56 லட்சம் என உயர்ந்துள்ளது. கடந்த 2010 முதல் இருசக்கர வாகனங்கள் எண் ணிக்கை ஆண்டுதோறும் சராசரி யாக 6 லட்சம் உயர்ந்துள்ளது. டெல்லியில் பதிவாகியுள்ள 88 லட்சம் வாகனங்கள் தவிர உ.பி., ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களின் வாகனங்களும் இங்கு இயங்கு கின்றன.
இந்நிலையில் டெல்லியில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு களை அமல்படுத்த வேண்டி அம் மாநில அரசு தொடர்ந்து பல்வேறு துறைகளின் கூட்டுக்குழு கூட்டங் களை நடத்தி வருகிறது. இதன் சார்பில் அரசுக்கு அளிக்கப்படும் பரிந்துரையை பொறுத்து விதிக் கப்படும் கட்டுப்பாடுகள் சோதனை அடிப்படையில் சில மாதங்கள் அமல்படுத்தி விட்டு கைவிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதிய போக்கு வரத்து கட்டுப்பாடுகளை டெல்லி போலீஸார் கண்காணித்து அமல் படுத்துவது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இத்துடன் டெல்லி அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.