டெல்லி அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் வாங்க அம்மாநில நிதி அமைச்சகம் தடை விதித்துள் ளது. இதற்கு பதிலாக அவற்றை வாடகைக்கு எடுத்து சமாளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாநில அரசில் மொத்தம் 129 துறைகள் உள்ளன. அவற்றின் உயரதிகாரிகளுக்காக கார், சுமோ, எஸ்.யூ.வி என 15,000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் இயங்குகின்றன. இவற்றில் முற்றிலும் பழுதடைந்த வாகனங்களை அகற்றிவிட்டு அவ்வப்போது புதிய வாகனங்கள் வாங்குவது வழக்கம். இந்நிலை யில் டெல்லியில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவை ஆம் ஆத்மி கட்சி அரசு பிறப்பித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில், “பழுதடைந்த வாகனங் களுக்கு பதிலாக வாடகை வாகனங் களை பயன் படுத்த வேண்டும். மிகவும் அரிதான சூழலில் மட்டுமே புதிய வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். உதாரணமாக, புதிய துறைகளின் அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், அவர் களுக்கு இணையான பதவிகளில் உள்ள செயலாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஆம் புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு இந்த அனுமதி தரப்படும். இந்த வாகனங்கள், எரிசக்தி சிக்கனம் மற்றும் குறைந்து சுற்றுச்சூழல் மாசு கொண்டதாக இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, வாடகை வாகனங்களின் அதிகபட்ச செலவு மாதம் ஒன்றுக்கு ரூ. 35,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 37,000 முதல் 67,000 வரையிலான சம்பள விகிதம் கொண்ட அதிகாரிகளுக்கு மட்டுமே அரசு வாகனங்கள் எனவும், அதை தவறாகப் பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க 4 சக்கர வாகனங் களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் அனுமதி வழங்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் ஜனவரி 1 முதல் 15 நாட்களுக்கு அமலாகிறது. இதனால் தினமும் 10 லட்சம் வாகனங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பயன்பாட்டில் உள்ள அண்டை மாநில கார்கள் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. மேலும், புதிய கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எந்த சட்டத்தின் கீழ் தண்டனை அளிப்பது என்றும் கேஜ்ரிவால் அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.