ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று இன்று அவர் இஸ்லாமாபாத் செல்கிறார். இந்த தகவலை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
இந்திய, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது தீவிரவாதம், காஷ்மீர் விவகாரம், எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் சுஷ்மாவின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.