இந்தியா

எம்.பி.க்கள் தேச நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தேச நலனை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டுமே தவிர பிராந்திய நலன் சார்ந்து செயல்படக் கூடாது என மக்களவையின் புதிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

16-வது மக்களவையின் புதிய சபாநாயகராக பாஜக எம்.பி. சுமித்ரா மகாஜன் இன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவரை இப்பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய மற்றவர்கள் வழிமொழிய ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தான் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மக்களவையில் உரையாற்றிய சுமித்ரா, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில், நமது நாடாளுமன்றம் ஆரோக்கியமான விவாதங்களை கண்டிருக்கிறது. அது தொடர வேண்டும். எனவே அனைத்து உறுப்பினர்களும் அமைதியான முறையில் விவாதங்களை எடுத்துச் செல்ல உதவ வேண்டும். மக்களவை, பல்வேறு கலாச்சார வேறுபாட்டிலும் நம் மத்தியில் நிலவும் ஒற்றுமையை பறை சாற்றுகிறது. எனவே நாம் தேச நலனையே முக்கியமாக கருத வேண்டுமே தவிர பிராந்திய நலனை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT