இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 4-வது நாளாக இன்றும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,403 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா 2-வது அலை இந்தியாவைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை தற்போது சில நாட்களாகத் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,702 ஆக உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
இதன் விவரம்:
''இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,92,74,823.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 91,702.
இதுவரை குணமடைந்தோர்: 2,76,55,493.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,51,367.
இதுவரை கரோனா உயிரிழப்புகள்: 3,63,079.
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர்: 3,403.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 11,21,671.
கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 32,74,672.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 24,60,85,649''.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.