இந்தியா

அரசமைப்பு சட்டத்தின் பெயரில் பதவிப் பிரமாணம்: சிவசேனா வலியுறுத்தல்

பிடிஐ

புனித நூல்களின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு பதிலாக அரசமைப்பு சட்டத்தில் பெயரில் பதவிப் பிரமாணம் எடுப்பதை பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் ஆக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா வின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா’வில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது: அரசமைப்பு சட்டமே அனைத்து மதத்தினருக்கும் புனித நூலாக இருக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைத்து மதங்களும் சமம். சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே இதைத் தான் கூறினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் சட்டத்தின் முன் அரசியல் சாசனம் உயர்வானது. புனித நூல்களின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு பதிலாக அரசமைப்பு சட்டத்தின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அளித்த அரசமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பது தற்கொலைக்கு சமம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசமைப்பு சட்டத்தை புனித நூல் என்றும் பிரதமர் கூறியுள் ளார். பிரதமர் தனது சிந்தனையை விரிவுபடுத்தி, மத அடிப்படையி லான அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும். இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.

அரசமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் ஆண்டையொட்டி, அரசமைப்பு சட்டம் தொடர்பான 2 நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “இந்தியா என்பதே எனது அரசின் மதம், அரசமைப்பு சட்டமே புனித நூல்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT