சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாருடன் நேற்று நடந்த மோதலில் மாவோயிஸ்ட் கமாண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொண்டகாவோன் மாவட்டம், பயானர் காவல் எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ரிசர்வ் போலீஸார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பிலும் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் உயிரிழந்தவர் மாவோயிஸ்ட்டுகளின் பயானர் பகுதி கமாண்டர் ரணாதர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தப்பியோடிய மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.