இந்தியா

தென்மேற்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் மேலும் தீவிரமடையும்

செய்திப்பிரிவு

அடுத்த 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழை பொழிவு இருக்கும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரபிக் கடலின் அனைத்து பகுதிகள் மற்றும் வடக்கு அரபிக் கடலின் சில பகுதிகள், மும்பை மற்றும் உட்புற மகாராஷ்டிராவின் பல பகுதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கொங்கன் பகுதிகளிலும் தீவிரமடையும்.

மேலும் தெற்கு குஜாராத்தின் சில பகுதிகள், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகள், வங்கக் கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக் கடலின் இன்னும் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறி உள்ளது.

அரபிக் கடல், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் எஞ்சியப்பகுதிகள், குஜராத்தில் மேலும் சில பகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒட்டுமொத்த ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்திஸ்கர் மற்றும் பிஹாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.


அடுத்த 2-3 தினங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT