இந்தியா

கான்பூர் சாலை விபத்தில் 17 பேர் பலி; ரூ. 2 லட்சம் பிரதமர் மோடி நிதியுதவி

செய்திப்பிரிவு

உத்திரப்பிரதேசம் கான்பூர் சாலை விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நேற்றிரவு பேருந்து ஒன்று, லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சச்சேந்தி என்ற பகுதியில் லோடு ஏற்றும் ஜே.சி.பி., வாகனத்தின் மீது பேருந்த வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணிம் செய்தவர்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கான்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

‘‘உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் .

இவ்வாறு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT