கர்நாடகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி 'கம்பளா' (எருமை ஓட்டப் பந்தயம்) போட்டி நடை பெறுகிறது.
தட்சின கன்னடா, உத்தர கன் னடா, உடுப்பி ஆகிய மாவட்டங் களில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாசிக்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போல, தங்களது குலதெய்வங்களுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் ‘கம்பளா' விளையாட்டு போட்டியை நடத்துகின்றனர்.
கம்பளா போட்டியின்போது உழுத நிலையில் இருக்கும் வயலில் இரு ஆண் எருமைகளை ஏரில் பூட்டி வீரர்கள் வேகமாக விரட்டுவார்கள். செம்மண் சேரும், செம்புல நீரும் தெறிக்க எருமைகள் சீறிப் பாய்ந்து வருவதை பார்வை யாளர்கள் வரப்புகளில் நின்று கண்டு ரசிப்பார்கள்.
இந்நிலையில் இந்தப் போட்டியை எதிர்த்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தப் போட்டிக்கு கடந்த ஆண்டு கடந்த மே மாதம் தடை விதித்தது.
இந்நிலையில் அகில பாரத துளு மக்கள் கூட்டமைப்பின் சார்பாக, கடந்த மாதம் 21-ம் தேதி குல்வாடியில் ‘சூர்ய சந்திர கம்பளா' போட்டி ரகசியமாக நடத் தப்பட்டது. இதனிடையே கடந்த 20-ம் தேதி சூரத்கல் கிராமத்தில் ‘அரச கம்பளா' போட்டி நடத்தப் பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியும், தட்சின கன்னட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும் இந்த போட்டி நடத்தப்பட்டதால் விழாக் குழு நிர்வாகிகள் 6 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப் பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்நிலையில் விலங்குகளின் பாதுகாப்புக்காக போராடும் ‘பீட்டா' (People for the ethical treatment of animals) அமைப்பின் இந்திய கிளையின் தலைவர் மணிலால், கம்பளா போட்டி தொடர்வதை தடுக்குமாறு தேசிய விலங்கு கள் நல வாரியத்துக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
அதில், “உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகாவில் கம்பளா போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியால் எருமை காளை கள் உடல் ரீதியாக காயப் படுத்தப்படுவது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காளைகளை சித்ரவதை செய்யும் இந்தப் போட்டியை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இதை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.