இந்தியா

பிரணாபுடன் சோனியா சந்திப்பு: அருணாச்சலப் பிரதேச ஆளுநருக்கு எதிர்ப்பு

பிடிஐ

அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு சதி செய்வதாகவும் இதற்கு அம்மாநில ஆளுநர் துணை புரிவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல், உட்பட மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியா ளர்களிடம் சோனியா கூறும்போது, “அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் சிலரை தூண்டிவிட்டு காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு துணை புரியும் வகையில் மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவின் செயல்பாடுகள் உள்ளன. எங்கள் புகார் மனு தொடர்பாக உரிய ஆலோசனை வழங்குவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்” என்றார்.

SCROLL FOR NEXT