டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்றும் நாளையும் காற்றின் தரம் மோசமானதாக இருக்கும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானியல் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் மேலும் பாதிக்கப்படும். பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசு எழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதியில் இருந்தும் தூசு வந்தடையலாம் என்பதால், பிஎம்10 எனும் அளவில் காற்றின் தரம் இருக்கும்.
டெல்லி-தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றின் தரம் நேற்று (ஜூன் 7-ம் தேதி) நடுத்தரமான அளவில் இருந்தது. ஜூன் 8 மற்றும் ஜூன் 9 அன்று மிதமானதில் இருந்து மோசமான பிரிவுக்கு காற்றின் தரம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசிப்படலம் எழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதிகளிலும் இருந்தும் தூசுப்படலம் வந்தடையலாம். இதனால் மக்கள் முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.