இந்தியா

சகிப்பின்மைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். சகிப்பின்மைக்கு எதிரான வாசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் மதவாதம் ஒழிக போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) நாடாளுமன்றத்தில் நடந்த சகிப்பின்மை குறித்த விவாதத்தில் கடும் வாக்குவந்தங்கள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT