இமாலய பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 4-5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இமாலய பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் சூறாவளி சுழற்சி வலுவடைந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை, வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால் அருணாச்சலப்பிரதேசம், ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் அசாம், மேகாலயா மேற்கு வங்கத்தில் உள்ள இமாலய பகுதிகள் மழை பெய்யும்.
7-ம் தேதிகளில் சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஒடிசா,10-ஆம் தேதி மேற்குவங்கத்தில் உள்ள கங்கை நதி பாயும் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 10-ஆம் தேதி ஒடிசாவின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கொங்கன் மற்றும் கோவா பகுதியில் புயல் சுழல் உருவாகியுள்ளதால், தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் மேற்கு கடலோர பகுதியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது.
இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.