இந்தியா

புத்தாண்டில் அமைதி, பாதுகாப்பு நல்லிணக்க சூழல் உறுதி செய்யப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

பிடிஐ

புத்தாண்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க சூழலை அரசு உறுதி செய்யும். குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித் துள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க சூழல் நிலவு வதை வரும் புத்தாண்டில் அரசு உறுதி செய்யும். பெண்கள் பாது காப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். வரும் ஆண்டு களில் குற்றங்கள் மற்றும் வன் முறைச் சம்பவங்களை குறைக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக் கப்படும்.

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் முன்பை விட தற்போது வெகுவாக மேம்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வன்முறை சம்பவங் கள் குறைந்திருக்கின்றன. பெண் களுக்கு எதிராக குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு கள் கடந்த ஆண்டில் அமைக்கப் பட்டது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதே போல் போலீஸ் படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதும் 2015ல் நடந்த முக்கிய பணியாகும்.

நேர்மறையான நடவடிக்கை கள் மூலம் இந்திய-வங்கதேச எல் லைகளில் கால்நடை கடத்தல் சம்பவங்கள் குறைக்கப்பட்டுள் ளன. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவ படையின் பாதுகாப்பில் பிற சர்வதேச எல்லைகளிலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டு, அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

புத்தாண்டில் தேசிய அவசர கால சமாளிப்பு முறையை உரு வாக்க உள்துறை அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது. இதற்காக 112 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்யவுள்ளோம். உடனடி உதவி தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

வரும் ஆண்டு முதல் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக இந்திய சைபர் குற்றங்கள் ஒருங் கிணைப்பு மையம் அமைக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT