இந்தியா

தமிழகத்தை கனமழை ஆட்டிப்படைக்க, ஒடிசாவில் வறட்சி

பிடிஐ

புவிவெப்பமடைதல் ஆய்வு விஞ்ஞானிகள் பருவநிலை மாற்ற எச்சரிக்கை விடுத்தது போல் நாட்டின் ஒரு பகுதியில் மழையும் வெள்ளமும் ஏற்பட ஒரு பகுதியில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒடிசாவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கோரியுள்ளதாக அமைச்சக மட்ட மத்திய அரசு குழு அங்கு நிலைமைகளை மதிப்பிட்ட பிறகு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை இணை செயலர் கே.எஸ்.ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த விளைச்சலைக் கொண்டு விவசாயிகள் வாழ்வது கடினம். நிச்சயமாக அவர்களுக்கு நிவாரணம் தேவை. நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்போம்.

சில மாவட்டங்களில் 80% பயிர்கள் நாசமாகியுள்ளன. சில மாவட்டங்களில் வறண்ட நிலை காரணமாக பயிரிடுதலே நடைபெறவில்லை. சில இடங்களில் பயிர் செய்யப்பட்டிருந்தாலும் விளைச்சல் இல்லை.

நாங்கள் இன்னும் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். எங்களால் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல முடியவில்லை, மாதிரி அடிப்படையில் நாங்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்வோம்.

மத்திய அரசின் பல்வேறு பாசன திட்டங்களிலிருந்து மாநில அரசு பயனடைய முடியும். மழை பெய்த பகுதிகள் தவிர பாசன வசதி உள்ள நிலங்களிலும் வறட்சி நிலைமை உள்ளது கால்வாயின் முடிவு பகுதியில் உள்ள வயல்களுக்குக் கூட நீர்வரத்து இல்லை.

வறட்சிக்கு மொத்தம் 13.41 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன” என்றார் அவர்.

SCROLL FOR NEXT