கரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதிலிருந்து சமாளிக்க உதவும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது உச்சபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. உற்பத்தி விலையிலிருந்து அதிகபட்சம் 70 சதவீதம் வரை விற்பனை விலை இருக்கலாம் என தெரிவித்துள்ளது
இதுகுறித்து மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய பார்மாசூடிகல்ஸ் விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
உற்பத்தி விலையில் இருந்து198 சதவீதம் வரை ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது விலை நிர்ணயிப்பதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாதாரண சூழலில் எடுக்கப்படும் அதிகாரத்தின் அடிப் படையில் இந்த விலை நிர்ணய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆக்சிஜன் விற்பனை யாளர்கள், விநியோகஸ்தர், மருத்துவமனை மற்றும் விற்பனை செய்யும் நிறுவனம் அனைத்துமே ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலைவிவரத்தை அதன் மீது ஒட்ட வேண்டும். மீறும் நிறுவனம் மீது100 சதவீத அபராதம் விதிக்கப்படும். விலை நிர்ணயத்தை மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் (எஸ்டிசி) கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.