இந்தியா

பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கு ரத்துக்கு வரவேற்பு

செய்திப்பிரிவு

டெல்லியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் வினோத் துவா பிரதமர் மோடியை விமர்சித்து யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து, பாஜக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இமாச்சலப் பிரதேச போலீஸார் தேச துரோக வழக்கை பதிவு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, 1962-ம் ஆண்டு தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேச துரோக வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “வினோத் துவா மீதான தேசத்துரோக வழக்கை மட்டும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. மாறாக, தேசத்துரோக வழக்கில் இருந்து பத்திரிகையாளர்களை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில், பத்திரிகை சுதந்திரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் தேசத்துரோக சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT