பிரதிநிதித்துவப்படம் | படம் உதவி ட்விட்டர் 
இந்தியா

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது

பிடிஐ


ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கும் , பரிசோதனை நடத்தவும், ஆய்வு செய்யவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு சில நிபந்தனைகளுடன் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தொற்றுநோய்வியல் மற்றும் நுண்உயிரியலின் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து சீரம் மருந்து நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பூனேயில் உள்ள ஹடாப்ஸர் மையத்தில் தயாரிக்க உள்ளது. ஆனால், ஆய்வு செய்யவும், பரிசோதனை நடத்தவும், ஹடாப்ஸர் மையத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் மருந்து நிறுவனம் விண்ணப்பம் வழங்கிய நிலையில் சிலநிபந்தனைகள் அடிப்படையில் சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காமாலா ஆய்வுநிறுவனத்துக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் நகலை சீரம் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தம் என்பது திசு வங்கியை பரிமாற்றம் செய்வது, வைரஸ் ஸ்டாக், தொழில்நுட்பம் பரிமாற்றம் ஆகியவற்றைப் பற்றி ஒப்பந்த நகலையும் வழங்கிட வேண்டும்.

மரபணு கையாளுதல் மறு ஆய்வுக்குவிடம் செய்துள்ள, திசு வங்கி, வைரஸ் ஸ்டாக் ஆகியவற்றின் இறக்குமதிக்கான ஒப்பந்த நகல், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறித்த ஆய்வு, மேம்பாடு ஆகியவற்றை நடத்த அளி்க்கப்பட்ட அனுமதி ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 4-ம் தேதி வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதன்பின் உரிமம் நீக்கப்படும், ரத்து செய்யப்படும்.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்காக திசு வங்கி, வைரஸ் ஸ்டாக் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கடந்த மே 18ம் தேதி மரபணு கையாளுதல் மறு ஆய்வுக்குவிடமும், உயிரிதொழில்நுட்பத்துறையிடமும் சீரம் நிறுவனம் விண்ணப்பத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT