இந்தியா

கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் ஊரடங்கு 14 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 2 முறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. எனினும், தொற்று பாதிப்பு 5,000-க்கும் கீழே குறைந்தால்தான் ஊரடங்கை தளர்த்த முடியும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இதையடுத்து, கர்நாடகாவில் வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித் துள்ளார். இப்போதைய கட்டுப் பாடுகள் தொடரும் என்றும் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மேலும், ட்விட்டரில் எடியூரப்பா வெளியிட்டிருக்கும் பதிவில், ‘‘இம்மாத இறுதிக்குள் 60 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 30-ம் தேதிக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும். கர்நாடகாவில் தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT