கர்நாடக சட்ட மேலவையின் 25 தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 25 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
ஆளும் கட்சியான காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், பாஜக 20, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 18, மற்ற கட்சிகள் 6, சுயேச்சைகள் 60 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. இந்த தேர்தலில் 99.6 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
75 உறுப்பினர்களை கொண்ட மேலவையில் ஆளும் காங்கிரஸுக்கு தற்போது 28 பேர் மட்டுமே இருக்கின்றனர். இதனால் முக்கிய மசோதாக்களுக்கு மேலவையில் ஒப்புதல் பெறுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே பெரும்பான்மைபெற வேண்டும் என்பதில் முதல்வர் சித்தராமையா உறுதியாக இருக்கிறார்.