உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து தானாகவே நீக்கப்படும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல் படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்களை பயன்படுத்தி முறை கேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
அதன்படி வாக்காளர் பட்டியலுடன் அந்தந்த மாவட்ட பிறப்பு, இறப்பு விவரங்கள் அடங்கிய கணினி சர்வர் இணைக் கப்படும். அதன்மூலம் உயிரிழந்த வாக்காளர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து தானாக நீக்கப்படும்.
இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், தார்ன் தாரண் ஆகிய மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
எனினும் இதில் சில புகார்கள் எழக்கூடும் என்பதால், உயிரிழந் ததாக கண்டறியப்படும் வாக்கா ளரின் முகவரிக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் முறைப்படி நோட்டீஸ் அனுப்புவார். குறிப்பிட்ட காலத்தில் நேட்டீஸுக்கு பதில் அளிக்கப்படாவிட்டால் அந்த வாக்காளரின் பெயர் பட்டியல் இருந்து நீக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.