கரோனா வைரஸ் தொற்று உலகை பெருமளவில் பாதித்துள்ளது. ஆனாலும் பல்வேறுஉயிர்க்கொல்லி நோய்களால் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகவே உள்ளது. அதிலும் வலியும், வேதனையை அளிக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோயாகும்.
புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் 2020-ல் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு கோடி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழப்பு 57 லட்சம். உலகம் முழுவதும் மருத்துவத் துறை மேம்பட்ட போதிலும் சிறிய வயதில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புற்றுநோய்க்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிற நோய்களை முன்கூட்டியே அறிய முடியும். ஆனால் புற்றுநோயை முன்கூட்டியே அறியும்நுட்பம் இதுவரை கண்டறியப் படவில்லை. பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாவது முற்றிய நிலையிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதால் வலியும் வேதனையும் தவிர்க்க முடியாததாகிறது.
மும்பையைச் சேர்ந்த திரிபாதி குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வினய் குமார் திரிபாதி மற்றும் அவரது மகன்கள் ஆஷிஷ் திரிபாதி, அனிஷ் திரிபாதி ஆகியோர் உருாக்கிய எபிஜெனிர்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த ட்சார் லேப் நிறுவனத்துடன் சேர்ந்து புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை ஹெச்ஆர்சி எனப்படும் பரிசோதனையை செய்து கொண்டால்போதுமானது. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பரிசோதனையில் தெரிய வரும். அவ்விதம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயிலிருந்தும் பெரும் வலி, வேதனையிலிருந்தும் காக்க முடியும்.
மூலக்கூறு அறிவியல் மூலம் இந்த நுட்பத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.