நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாகவும் குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் கூறும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கரோனா தொற்று காரணமாகமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், பள்ளிப் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதால் குழந்தைகளுக்கு அதிகவேலை இருப்பதாக காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர்மோடியிடம் புகார் தெரிவித்துள் ளார். 45 நிமிடங்கள் ஓடும் அந்தக்காட்சியை ஒளரங்கசீப் நக் ஷ் பண்டி என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரிடம் புகார் கூறிசிறுமி பேசும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுமி கூறியிருப்பதாவது:
எனது ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி வரை நடக்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களும் பின்னர் கம்ப்யூட்டர் வகுப்பும் தொடர்ந்து நடக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்னக் குழந்தைகள் இந்த அதிக வேலையை எதிர்கொள்ள வேண்டும்? ... என்ன செய்வது மோடி ஐயா? வணக்கம்.
இவ்வாறு அந்த சிறுமி கூறியிருக்கிறார். கடந்த சனிக் கிழமையன்று ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ காட்சியை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்குள் அளித்திருப்பதுடன் 1,200 பேர்இந்தப் பதிவை ரீட்வீட் செய் துள்ளனர்.