கரோனா தடுப்பூசி மருந்து களில் ஒன்றான கோவாக்சின் உற்பத்தி ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடியை எட்டும் என்றுதேசிய கோவிட் தடுப்பூசி உற்பத்தி குழுவின் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார்.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனாதடுப்பூசி போடும் பணிகள்தொடங்கியதால் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கண்டறி யப்பட்ட கோவாக்சினை ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது உற்பத்தியாகும் அளவை விட 50 சதவீத உற்பத்தி ஜூன் இறுதிக்குள் எட்டப்படும். அப்போது 10 கோடி முதல் 12 கோடி வரை தடுப்பூசிகள் தயாராகும். அதன் பிறகு மாதந்தோறும் இதே அளவிலான தடுப்பூசிகள் உற்பத்தியாகும்.
புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டை தயாரிக்கிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 25 கோடி தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும். இது தவிர 5 கோடி முதல் 6 கோடி தடுப்பூசிகள் பிற சர்வதேச தடுப்பூசி மருந்துகளையும் தருவித்து ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மாதத்துக்கு 7கோடி முதல் 7.5 கோடி கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி யாகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில்1,52,734 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 46 நாள்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.