இந்தியா

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் அதிதீவிர இயற்கை பேரிடர்: மாநிலங்களவையில் அரசு தகவல்

பிடிஐ

மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மாநில அரசிடமிருந்து பெறப் பட்ட தகவலின்படி, முதல்கட்ட கணக்கெடுப்பில் தற்போதைய மழை வெள்ளத்தால் 354 மனிதர்கள், 4,383 கால்நடைகள் உயிரிழந்துள்ளனர். 1.7 லட்சம் குடிசைகள் சேதமடைந்துள்ளன.

இந்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து நடைமுறை காரணங்களுக்காக அதிதீவிர இயற்கைப் பேரிடர் என தீர்மானிக் கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடரை தேசிய பேரிடர் என அறிவிப்பதற்கு விதிமுறைகளில் இடமில்லை.

எனினும் அதிதீவிர இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தேசிய நிவாரண நிதியி லிருந்து கூடுதல் நிதியளிக்க பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT