பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு; 1,52,734 ஆக சரிவு 

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,734 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 45நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,734 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,80,47,534

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,52,734

இதுவரை குணமடைந்தோர்: 2,56,92,342

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,38,022

கரோனா உயிரிழப்புகள்: 3,29,100

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,128

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 20,26,092

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 21,31,54,129

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 34,48,66,883 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 16,83,135 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT