இந்தியா

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3-ம் தேதி தொடங்கும்: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

செய்திப்பிரிவு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு அதிகமான இந்தியாவிற்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் பருவமழையான தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது.

தென்மேற்குப் பருவமழை சீராக இருந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என முன்கூட்டியே கணித்து இருந்தது. அதுபோலவே இந்த வழக்கத்தை விட முன்கூட்டியே கேரளாவில் 31-ம்தேதியே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் முந்தைய கணிப்புக்கு பதிலாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்கு பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கேரளாவில் மழைப் பொழிவை அதிகரிக்கும் என தெரிகிறது. ஆகையால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.

* அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் கர்நாடக கடலோர பகுதிக்கு மேலே 3.1 கி.மீ தொலைவில் புயல் சுழற்சி காணப்படுகிறது.

* இந்த புயல் சுற்று தமிழகம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 மற்றும் 7.6 கி.மீ உயரத்தில் உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT