நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக நடந்த தேசிய படுகொலைகளை நினைவில் வைத்துக் கொள்வது கடினம். இப்போது 40 வயதுக்கு மேலாகும் எனக்கு, 5 முக்கிய படுகொலை சம்பவங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது நன்றாக நினைவிருக்கிறது.
அசாமில் வங்க தேசத்தினர் குடியேறிய பிறகு, நெல்லி என்ற இடத்தில் கடந்த 1983-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காலை பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது 2,000-க்கும் மேற்பட்ட வங்கதேச முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த 84-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போபால் விஷவாயு கசிவில் சுமார் 3,000 பேர் பலியாயினர்.
அதே ஆண்டு டெல்லியில் 2,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மீண்டும் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். கடைசியாக 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் ஆயிரக் கணக்கானோர் இறந்தனர்.
தவிர சில மிகப்பெரிய படுகொலைகளை நான் விட்டுவிட் டேன். இவை மட்டுமின்றி படகு கவிழ்ந்தும், இயற்கை சீற்றங் களாலும் நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை காப்பாற்ற மாநில அரசுகளால் முடியவில்லை. இதில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட காஷ்மீரிகள், பண்டிட்களை நான் சேர்க்கவில்லை. ஏனெனில் ஒரு முறை மட்டும் படுகொலை நடக்கவில்லை. பல மாதங்களாக, பல ஆண்டுகளாக படுகொலைகள் நடந்து வருகின்றன.
நான் மேலே குறிப்பிட்ட படு கொலைகள் குறித்த வழக்குகளில், ஒன்றில்கூட பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் முறை யான விசாரணை நடத்தி குற்ற வாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியாத நமது செயலற்ற நிலை வெளிப்படையாக தெரிகி றது. இந்த வழக்குகளில் நீதி கிடைக்காததற்கு ஒரே ஒரு காரணம்தான் தெரிகிறது.
வன்முறையில் ஈடுபட்ட தங்கள் கட்சியினருக்கு தண்டனை பெற்றுத் தர ஆளும் கட்சி விரும்புவதில்லை. அதற்கு உதாரணம் 2002-ல் நடந்த குஜராத் கலவர வழக் கில் நீதி கிடைக்காததைக் கூறலாம். 84-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ்காரர் களை, அந்த கட்சி காப்பாற்றி வருகிறது என்று பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்படுகிறது. இப் போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. சீக்கியர் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக அரசுக்கு வாய்ப்பு உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றவு டன், இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி தனது விசாரணையில், “சீக்கியர் கலவரம் குறித்த வழக்கில் முறையான விசாரணை நடைபெற வில்லை” என்று கூறியது. இதையடுத்து, புதிதாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 3 நபர் சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைத்தது. (ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரமோத் அஸ்தானா தலைமையில் போலீஸ் அதிகாரி குமார் ஞானேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் கபூர் ஆகியோர் அடங்கிய குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.)
ஆறு மாதங்களில் ஆதாரங் களை திரட்ட குழுவுக்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. ஆனால், 6 மாதங்களுக்கு பிறகு குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த 6 மாதத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால், “ஆறு மாதங்களில் குறைந்தப்பட்ச விசாரணையே நடந்துள்ளது” என்று கேரவன் மேகசின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.
அந்த செய்தியில், “பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினர் சார் பில் ஆஜராகி வரும் வழக்கறி ஞர் எச்.எஸ்.போல்கா கூறிய கருத்துகள் மேற்கோள் காட்டப்பட் டுள்ளது. அதில், “சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கை புதிதாக விசா ரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போது பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த வழக்கில் எந்த முன்னேற் றத்தையும் அந்த குழுவினர் கொண்டுவரவில்லை. பாதிக்கப் பட்ட ஒருவர் சிறப்பு விசாரணை குழுவுக்கு அனுப்பிய கடிதம் எந்த பதிலும் இல்லாமல் திரும்பி வந்தது. அந்தக் கடிதத்தைக்கூட சிறப்பு குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர்” என்று போல்கா கூறியுள்ளார்.
“சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது ‘ஜிம்மிக்’ வேலை. சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு எதுவும் செய்யா மலேயே, நற்பெயரை சம்பாதிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது” என்று போல்கா கூறியுள்ளார். இது உண்மையாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சீக்கியர் கலவரத்தில் காங்கிரஸ்காரர்கள் பலர் மீது முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால், சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றிலாவது நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.