கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் 2.76 லட்சம் பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர்: 46 நாட்களில் மிகக்குறைவாகப் பதிவான தொற்று

பிடிஐ

இந்தியாவில் கடந்த 46 நாட்களில் மிகக்குறைவாக 24 மணி நேரத்தில் 1.65 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்பட்டது. 2.76 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 553 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு சதவீதம் 8.02 ஆகக் குறைந்துள்ளது.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 21 லட்சத்து 14 ஆயிரத்து 508 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 7.58 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 91.25 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து 2 லட்சத்து 76 ஆயிரத்து 309 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 320 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 25 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 34 கோடியே 31 லட்சத்து 83 ஆயிரத்து 748 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 20 லட்சத்து 63 ஆயிரத்து 839 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT