லட்சத் தீவுகளின் நிர்வாகியாக குஜராத்தை சேர்ந்த பிரபுல் கோடா படேல் கடந்த ஆண்டு பதவியேற்றது முதல், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றங்களை செய்து வருகிறார். இதற்கு நாடுமுழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக லட்சத் தீவுகளின் ஆட்சியர் எஸ்.அஸ்கர் அலி, கொச்சியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
லட்சத்தீவுகள் நிர்வாகத்தால் சுயநலம் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதிய மாற்றங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்ற னர். லட்சத்தீவுகளின் வளர்ச்சிக் காகவும் அங்குள்ள மக்களின் எதிர்காலத்துக்காகவும் நிர்வாகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
லட்சத் தீவுகளுக்கு வெளியே சுயநல சக்திகள் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் லட்சத் தீவுகளில் அமைதி நிலவுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் அதை ஜனநாயக நடைமுறைகள் வழியாகவே செய்வோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணி களுக்கு மட்டுமே மது விற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது, உள்ளூர் மக்களுக்கு அல்ல. இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்க கடும் சட்டம் தேவைப்படுகிறது. எனவே குண்டர் தடை சட்டத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1,000 சுற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. போதைப் பொருள், மதுபானம் கடத்தல் மற்றும் போஸ்கோ சட்ட வழக்குகளும் லட்சத்தீவுகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன.
இவ்வாறு ஆட்சியர் அஸ்கர் அலி கூறினார்.
அத்தியாவசிய பொருட் களுக்காக கொச்சியுடன் கூடு தலாக மங்களூரில் இருந்து சரக்குப் போக்குவரத்து என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.