நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரி கையை கையகப்படுத்தி, அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொருளாளர் மோதி லால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதி மன்றத்தில் சோனியா, ராகுல் இரு வரும் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நேரில் ஆஜராவதற்கு விலக்குக் கோரும் மனுக்களையும் தள்ளுபடி செய் தார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 6, 2014-ல் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவை நீட்டிக்க வும் நீதிபதி மறுத்துவிட்டார்.
நேஷனல் ஹெரால்டு வெளியீட் டாளர்களான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜெஎல்) நிறு வனத்துக்கு வட்டியில்லா கடனை நீட்டித்ததற்கான தேவை என்ன எனவும் நீதிமன்றம் கேள்வியெழுப் பியது.
கடந்த 2014 ஜூன் 26-ல், விசா ரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி யது. அப்போது, உயர் நீதி மன்றத்தை அணுகி சோனியா, ராகுல் உள்ளிட்டோர் சம்மனுக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்த னர். சோனியா, ராகுல் மனுக்களின் மீதான விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடை நீட்டிக்கப் பட்டது.
தற்போது, சோனியா ராகுல் ஆகி யோரின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜராக விலக்கு கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடைக் காலத் தடையை நீட்டிக்கவும் மறுத்துள்ளதால் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.